/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு
/
சிறப்பு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு
ADDED : அக் 19, 2024 12:34 AM
திருப்பூர்: வாரந்தோறும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. கடந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிறு என மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், திருப்பூரில் இருந்து, 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லை. வரும், 31ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் அடுத்த வாரம் (அதாவது, 26ம் தேதிக்கு பின்) சொந்த ஊர் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், நடப்பு வாரம் (அக்., 19 மற்றும், 20ம் தேதி) எதிர்பார்த்த கூட்டம் இருக்க வாய்ப்பில்லை.
இதனால், நடப்பு வாரம் திருப்பூரில் இயங்கும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. அதன்படி, கோவில்வழியில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பத்து என மொத்தம், 40 பஸ்கள் மட்டும் நடப்பு வாரம் இயக்கப்பட உள்ளது. பயணிகள் எண்ணிக்கை இல்லாவிடில், இந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப் படுமென, மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.