/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடையில் 'ரிப்ளெக்டர்'; பொதுமக்கள் வலியுறுத்தல்
/
வேகத்தடையில் 'ரிப்ளெக்டர்'; பொதுமக்கள் வலியுறுத்தல்
வேகத்தடையில் 'ரிப்ளெக்டர்'; பொதுமக்கள் வலியுறுத்தல்
வேகத்தடையில் 'ரிப்ளெக்டர்'; பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 24, 2025 11:10 PM

உடுமலை; தளி ரோட்டில், விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையால், அமைக்கப்பட்ட வேகத்தடையில், ரிப்ளெக்டர்கள் பொருத்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக தளி ரோடு உள்ளது. இந்த ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்திப்பு பகுதி உள்ளது.
அவ்விடத்தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையால் வேகத்தடை அமைக்கப்பட்டு, வெள்ளை வர்ணம் பூசியுள்ளனர். இந்நிலையில், வேகத்தடையில் குறுகிய நாட்களில், வெள்ளை நிற கோடுகள் மறைந்து விடுகிறது.
இதனால், இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடையில், ரிப்ளெக்டர்கள் பொருத்த வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறையை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.