/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாறு நாள் திட்ட தொழிலாளருக்கு வேலை மறுப்பு: மா.கம்யூ., புகார்
/
நுாறு நாள் திட்ட தொழிலாளருக்கு வேலை மறுப்பு: மா.கம்யூ., புகார்
நுாறு நாள் திட்ட தொழிலாளருக்கு வேலை மறுப்பு: மா.கம்யூ., புகார்
நுாறு நாள் திட்ட தொழிலாளருக்கு வேலை மறுப்பு: மா.கம்யூ., புகார்
ADDED : ஆக 09, 2024 02:18 AM
திருப்பூர்;மா.கம்யூ., திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அறிக்கை:
மத்திய பட்ஜெட்டில், நுாறு நாள் வேலை திட்டத்துக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்கு மாதங்கள் கடந்துவிட்டநிலையில், 41 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 44 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மட்டுமே, அடுத்த எட்டு மாதங்களுக்கு செலவிடமுடியும்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளிலும், வேலை அட்டை வைத்திருக்கும் பலருக்கும், வேலை மறுக்கப்படுகிறது; மாதக்கணக்கில் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தேசிய வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கவேண்டும். தினசரி சம்பளத்தை 600 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16 ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தாராபுரம், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முன்புறம், நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளரை திரட்டி மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படுகிறது.