/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லட்சுமி மில்ஸ்' ஸ்டாப்பில் நிற்க மறுப்பு: பஸ் சிறைபிடிப்பு
/
'லட்சுமி மில்ஸ்' ஸ்டாப்பில் நிற்க மறுப்பு: பஸ் சிறைபிடிப்பு
'லட்சுமி மில்ஸ்' ஸ்டாப்பில் நிற்க மறுப்பு: பஸ் சிறைபிடிப்பு
'லட்சுமி மில்ஸ்' ஸ்டாப்பில் நிற்க மறுப்பு: பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஏப் 05, 2025 05:55 AM

பல்லடம்; கோவையில் இருந்து- திருப்பூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று, நேற்று மாலை, கோவையில் இருந்து திருப்பூர் புறப்பட்டது.
கோவையில் ஏறிய கல்லுாரி மாணவர் ஒருவர், பல்லடம் அடுத்த, கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்குவதற்காக நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
'லட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காது' என நடத்துனர் கூறியதைத் தொடர்ந்து, ஊரில் உள்ள தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, லட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்புக்கு வந்த தனியார் பஸ் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.
'கே.என்.புரம் பகுதியில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து, எண்ணற்ற மாணவர்கள், அரசு தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர், அரசு - தனியார் பஸ்கள் மூலம், தினசரி, கோவை சென்று வருகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று தான் செல்ல வேண்டும்.
ஏற்கனவே இதேபோன்று நிக்காமல் சென்றதால் பஸ்களை சிறைபிடித்தோம். இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், எதற்காக லட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காது என்று கூறுகிறீர்கள்' என, டிரைவர் மற்றும் நடத்துனரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இனிமேல் இதுபோல் நடக்காது என்று டிரைவரும், நடத்துனரும் உறுதி கூறினர்.

