/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்
/
மண்டல பாசனம் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 21, 2025 10:16 PM

உடுமலை; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, 7 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கால்வாயில், ஏ.நாகூர், விருகல்பட்டி, கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, கொண்டம்பட்டி உள்ளிட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்குட்பட்ட விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.
கிளை கால்வாயில் இருந்து, நிலங்களுக்கு செல்லும் பகிர்மான கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகிறது. இக்கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், துார்வார விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம்( பாசன சபை)கள் வாயிலாக பகிர்மான கால்வாய்கள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.