/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !
/
குறு - சிறு நிறுவனங்கள் 'உத்யம்' பதிவு அவசியம் !
ADDED : ஜன 30, 2025 07:21 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தொழில் பாதுகாப்புக்குழு மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் தாரிக் பேசியதாவது:
அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோரும், தங்கள் நிறுவனங்களை 'உத்யம்' போர்ட்டலில் பதிவு செய்து சான்றுபெற்றுக்கொள்ளவேண்டும். 'உத்யம்' பதிவு செய்தால்தான் மானியங்கள், தொழில் கடன்கள் பெற முடியும். கலைஞர் கைவினை திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லாத கடனுதவி, 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம், 5 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயனாளியாக விரும்பும் தொழில்முனைவோர், msmeonline.tn.gov.in என்கிற இணையதளத்தில், விண்ணப்பிக்கவேண்டும். புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்), வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம், பி.எம்.இ.ஜி.பி., எனப்படும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என, ஏராளமான அரசு திட்டங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

