/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவாரிகளை முறைப்படுத்தினால் ரூ.25,000 கோடி கிடைக்கும்!
/
குவாரிகளை முறைப்படுத்தினால் ரூ.25,000 கோடி கிடைக்கும்!
குவாரிகளை முறைப்படுத்தினால் ரூ.25,000 கோடி கிடைக்கும்!
குவாரிகளை முறைப்படுத்தினால் ரூ.25,000 கோடி கிடைக்கும்!
ADDED : டிச 13, 2024 02:21 AM
திருப்பூர்:''முறைகேடு கல்குவாரிகளை முறைப்படுத்தினால், ஆண்டுக்கு, 25,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் செல்ல.ராஜாமணி கூறினார்.
திருப்பூரில், அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில், 450 கிரஷர்களுக்கு மட்டுமே எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, 2,000க்கும் மேற்பட்ட கிரஷர்கள் தரமில்லாத மணலை உற்பத்தி செய்கின்றன. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட, 35 மீ., ஆழத்துக்கு பதிலாக 300 மீ., வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
நெல்லை, தென்காசி, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு அனுமதி அளவுக்கு மீறி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கலெக்டர்களுக்கு அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. குவாரிகளில் உரிய ஆய்வு நடத்தி, அவற்றை முறைப்படுத்தினால் ஆண்டுக்கு, 25,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.