/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சீரமைப்புப்பணிகள் துவக்கம்
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சீரமைப்புப்பணிகள் துவக்கம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சீரமைப்புப்பணிகள் துவக்கம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சீரமைப்புப்பணிகள் துவக்கம்
ADDED : பிப் 18, 2025 11:56 PM

திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் (காட்டன் மார்க்கெட்) அமைந்துள்ளது. வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் இம்மையம் இயங்கி வருகிறது. இங்கு வேளாண் விளை பொருட்களை இருப்பு வைக்கும் கிடங்குகள் உள்ளன.
வளாகத்தின் உட்புறத்தில், கிடங்குகளுக்குச் சென்று வரும் வகையில் பாதை உள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிறது. மார்க்கெட் கடைகள் இயங்கிய காரணத்தால், இப்பகுதியில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வந்தன. இதனால், வளாகம் முழுவதும் தரை தளம் சேதமடைந்து காணப்பட்டது.
சட்டசபையில், வேளாண் துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் 216 விற்பனைக் கூட வளாகங்கள் உள்ளன. இதை இரு பிரிவாக தலா 100 கூடங்கள் சீரமைப்பு செய்ய 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அவ்வகையில், முதல் கட்டமாக 100 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் சீரமைப்பு பணி நடந்தது. இரண்டாவது கட்டமாக மேலும் 100 விற்பனைக் கூட வளாகங்கள் சீரமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளா கம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பணி துவங்கியுள்ளது. வளாகத்தின் பிரதான வழித்தடம் முற்றிலும் கான்கிரீட் தளமாக மாற்றும் வகையில் திட்டமிட்டு பணி நடக்கிறது.

