/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
/
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
ADDED : அக் 29, 2024 09:07 PM

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இரு தொகுதிகளிலும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவு இடம் பெற்றுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
உடுமலை தொகுதியில், 129 ஓட்டுச்சாவடி மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில், ஆண்கள், 1,26,954 பேரும், பெண்கள், 1,37,727, மூன்றாம் பாலினத்தவர், 31 பேர் என மொத்தம், 2,64,712 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதியில், 119 ஓட்டுச்சாவடி மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு, 1,15,109 ஆண்கள், 1,21,333 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என, 2,36,461 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இரு தொகுதிகளிலும், ஆண்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, வரும், நவ., 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர்களாக இணைய, படிவம் - 6, வெளிநாடு வாழ் வாக்காளரை பெயரை பட்டியலில் சேர்க்க, 6 ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் இணைக்க, 6 பி, பெயர் நீக்க, படிவம்-7, குடியிருப்பு மாற்றம், பெயர், பாலினம், பிறந்த தேதி, வயது, உறவு முறை, முகவரி, மொபைல் எண், போட்டோ ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ள, படிவம்-8 வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் வசதிக்காக, வரும், நவ., 16, 17 மற்றும் 23, 24ம் தேதி என சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில்,சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாகவும், Voters Help Line App என்ற மொபைல் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.