/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
19ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு!; பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்!
/
19ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு!; பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்!
19ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு!; பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்!
19ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு!; பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்!
UPDATED : டிச 17, 2025 08:05 AM
ADDED : டிச 17, 2025 06:32 AM

திருப்பூர்: எஸ்.ஐ.ஆர். கணக்கீடு பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 19ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தீவிர திருத்தம் செய்யப்படுவதால், அனைத்து வாக்காளர்களும், வரைவு பட்டியலை பார்வையிட்டு, பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய தவறக்கூடாது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நவ. 4ல் துவங்கி இம்மாதம் 14ம் தேதி வரை நடைபெற்றது. பி.எல்.ஓ.கள் வாயிலாக, வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அக். 27ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். வாக்ககாளர் அனைவருக்கும், எஸ்.ஐ.ஆர். படிவங்கள், 2,536 பி.எல்.ஓ.,க்கள் வாயிலாக வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. அவை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்துள்ளது.
கணக்கீட்டு படிவங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரின் ஒப்புதலோடு, தகுததியான வாக்காளரின் பெயர், வரைவு பட்டியலில் சேர்க்கப்படும். தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வரும் 19 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தீவிர திருத்தத்தில், மாவட்டத்தின் மொத்த வாக்காளரில், 20 சதவீதம் பேரின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பார்வையிட தவறாதீர்!
-------------------
ஒவ்வொரு ஆண்டும், வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, நவம்பர் மாதம், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படும்; பெயர் சேர்த்தல், நீக்கம் உள்பட திருத்தங்கள் செய்யப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும். பெரும்பாலான வாக்காளர்கள், வரைவு பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் ஆகியவற்றில் தங்கள் பெயர் உள்ளதா என பார்வையிடுவதே இல்லை.
தற்போதைய தீவிர திருத்தத்தில், இறந்த வாக்காளர், இரட்டை பதிவு உள்ள வாக்காளர் மட்டுமின்றி கணக்கீடு படிவம் பெறாத மற்றும் படிவம் பெற்றும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. ஆகவே, வாக்காளர்கள், பட்டியலை பார்வையிடுவதில், அலட்சியம்காட்டக்கூடாது.
வரும் 19 ம் தேதி வெளியாகும் வரைவு பட்டியலில், தங்கள் பெயர், குடும்ப உறுப்பினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவா என, ஒவ்வொரு வாக்காளரும், கடாயம் பட்டியலை பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். தகுதியிருந்தும் பெயர் நீக்கப்பட்டிருப்பின், அத்தகைய வாக்காளர்கள், 19ம் தேதி முதல், வாக்காளர் பதிவு அலுவலரிடம் மேல்முறையீடு செய்து, பட்டியலில் பெயர் இணைத்து கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல், அந்தந்த ஓட்டுச்சாவடி, தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில், 19ம் தேதி முதல் பார்வைக்கு வைக்கப்படும். பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா என, பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்

