/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
/
கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 08:26 AM

உடுமலை : மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி ஆயக்கட்டு பகுதியில், 40 நாட்கள் வளர்ந்த நெற்பயிர்கள், தரமற்ற களைக்கொல்லி தெளிப்பு உள்ளிட்ட காரணங்களால், வளர்ச்சியின்றி கருகியது.
அப்பகுதியில் மட்டும், 2 ஆயிரம் ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மடத்துக்குளம் வேளாண்துறை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் தலைமையிலான குறை தீர் கூட்டத்திலும் புகார் தெரிவித்தனர். இருப்பினும், வேளாண்துறை தரப்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று, பாதிக்கப்பட்ட நெல் வயல்களில், மா.கம்யூ., திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
மா.கம்யூ., கட்சியினர் கூறுகையில், 'பல ஆயிரம் ஏக்கரில், நெற்பயிர்கள் பாதித்தும் வேளாண்துறையினர் அலட்சியமாக உள்ளனர். ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.