/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிவாரண நடவடிக்கைகள் சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
/
நிவாரண நடவடிக்கைகள் சாய ஆலைகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 28, 2025 11:34 PM

திருப்பூர்; நெருக்கடியான இந்த சூழலில், மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, சாய ஆலை துறையை பாதுகாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் சாய ஆலைகள் உரிமையாளர் சங்கத் தலைவர் காந்திராஜன் அறிக்கை:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இந்திய பின்னலாடை ஏற்றுமதித்துறை, பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. உலகிலேயே முதல்முறையாக பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு முறையை, திருப்பூர் சாய ஆலை துறையினர் செயல்படுத்திவருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழலை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
சர்வதேச தரங்களை கடைபிடிப்பதற்கான தொழில் துறையினரின் முயற்சிகளையும் காட்டுகிறது. அமெரிக்காவின் கூடுதல் வரியால், உலக சந்தையில் திருப்பூர் நிறுவனங்களின் போட்டித்திறன் பாதிக்கும் என தெரியவருகிறது.
பின்னலாடை ஏற்றுமதியில் வளர்ச்சியை எதிர்பார்த்து, வெளிநாட்டு வர்த்தகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, கடந்த ஓராண்டாக அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துள்ளன. தற்போதைய சூழலில், இத்தகைய நிறுவனங்கள் பின்னடைவையே சந்திக்க நேரிடுகிறது.
நெருக்கடியான இந்த சூழலில், சாய ஆலைத்துறையை காப்பாற்ற, மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, காந்திராஜன் தெரிவித்துள்ளார்.

