/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொட்டிய குப்பையை அகற்றுங்கள்; இச்சிப்பட்டி பொதுமக்கள் மனு
/
கொட்டிய குப்பையை அகற்றுங்கள்; இச்சிப்பட்டி பொதுமக்கள் மனு
கொட்டிய குப்பையை அகற்றுங்கள்; இச்சிப்பட்டி பொதுமக்கள் மனு
கொட்டிய குப்பையை அகற்றுங்கள்; இச்சிப்பட்டி பொதுமக்கள் மனு
ADDED : ஆக 04, 2025 10:01 PM

ப ல்லடம் அருகே, இச்சிப்பட்டியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்ட முயன்றபோது, அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தீவிர போராட்டத்தை கையிலெடுத்து, தடுத்து நிறுத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், இச்சிப்பட்டி முன்னாள் ஊராட்சி தலை வர் சா மிநாதன் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இணைந்து அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், தரம் பிரிக்காத அனைத்துவகை குப்பைகளையும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இச்சிப்பட்டி ஊராட்சியில் கொட்டியது. பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தை கையிலெடுத்ததால், குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. குப்பை கொட்டுவதற்கு, சூலுார் இந்திய விமானப்படைத் தளத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டது.
கொட்டிய குப்பையை திரும்ப எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், கொட்டிய குப்பைகளை இதுவரை அகற்றாததால், கடும் துர்நாற்றமும், சுற்றுச்சூழலுக்கு மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது. இச்சிப்பட்டி பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பையை, உடனடியாக அகற்றவேண்டும். மாநகராட்சி நிர்வாகம், ஆக்கப்பூர்வமான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் அளித்த மனுவில், ''திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

