/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றி கொடுங்க; பள்ளபாளையம் மக்கள் மனு
/
ஆக்கிரமிப்பு அகற்றி கொடுங்க; பள்ளபாளையம் மக்கள் மனு
ஆக்கிரமிப்பு அகற்றி கொடுங்க; பள்ளபாளையம் மக்கள் மனு
ஆக்கிரமிப்பு அகற்றி கொடுங்க; பள்ளபாளையம் மக்கள் மனு
ADDED : ஜூலை 16, 2025 08:53 PM
உடுமலை; உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் அரசு பொது இடங்கள், வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிராமத்துக்கு இயக்கப்படும் ஒரே பஸ்சும் நிறுத்தப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்', திட்ட முகாமில், பள்ளபாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளபாளையம் பிரிவில் இருந்து கிராமத்துக்கு செல்லும் ரோடு மற்றும் கிராம வீதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பஸ் மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியாமல், பாதிப்பு ஏற்படுகிறது.
பல முறை மனுக்கொடுத்தும், அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ரோடு ஒற்றையடிபாதையாக மாறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.