/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
/
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
பிளக்ஸ் பேனர்களை அகற்றுங்க; ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஏப் 15, 2025 08:28 PM
உடுமலை; உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள, பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் பஸ் ஸ்டாப், பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதிகள், ரோட்டோரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்களால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அவற்றை அப்புறப்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது அடிக்கடி பலத்த காற்று வீசுவதாலும், மழை பெய்வதாலும், பிளக்ஸ் பேனர்களால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு, விளம்பரதாரர்கள்தான் பொறுப்பு ஏற்க நேரிடும். அதற்கு முன்பு பேனர்களை அப்புறப்படுத்த வேண்டுமென ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.