/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைச்செடிகளை அகற்றுங்க குட்டையை பராமரிக்கணும்
/
களைச்செடிகளை அகற்றுங்க குட்டையை பராமரிக்கணும்
ADDED : ஜன 23, 2025 11:38 PM

உடுமலை, ; கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சியில், குடியிருப்புகளுக்கு அருகே உள்ள குட்டையில் களைச்செடிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியம், கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சி எஸ்.வி., புரம் அருகே, மழைநீர் தேங்கும் குட்டை உள்ளது. குட்டையைச்சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.
குட்டையில் சாதாரண நாட்களில் தண்ணீர் அளவான நிலையில் இருக்கும். தற்போது மழையின் காரணமாக குட்டையில் தண்ணீர் நிறைந்துள்ளதுடன், முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் களைச்செடிகள் முற்றிலும் பரவியுள்ளது.
போதிய பராமரிப்பில்லாமல் இருப்பதால், இவ்வாறு குட்டையில் செடிகள் வளர்ந்துள்ளது. களைச்செடிகள் அதிகரித்து வருவதால், அப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது.
குழந்தைகள், முதியோர் கொசுத்தொல்லையால் நோய்த்தொற்றுக்கும் ஆளாகியுள்ளனர். அப்பகுதி மக்கள், சொந்தமாகவே குட்டையில் உள்ள களைச்செடிகளை அகற்றவும் முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் செடிகள் அதிகமாக இருப்பதால், முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய நிர்வாகம் அப்பகுதியை ஆய்வு செய்து, குட்டையை துாய்மைப்படுத்துவது மட்டுமே, கொசுத்தொல்லையால் ஏற்படும் நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக இருக்குமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.