/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி திறப்பு
/
ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி திறப்பு
ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி திறப்பு
ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி திறப்பு
ADDED : ஜன 01, 2024 12:11 AM

திருப்பூர்;திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனம், ஆறுமுகம் அறக்கட்டளை ஆகியன சார்பில், துாரம்பாடி கிராமம் ஓலப்பாளையத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது. அருகில் உள்ள, குலமாணிக்க ஈஸ்வரர் கோவில் வழித்தடமும் சீரமைக்கப்பட்டது.
அனிதா டெக்ஸ்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், தனது தந்தை பிறந்த எழுகாம்வலசு கிராமத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மேல்நிலைப்பள்ளியை புதுப்பித்து கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தனது தாயார் பிறந்த ஊரான, ஓலப்பாளையத்தில் உள்ள தொடக்க பள்ளியை, 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து கொடுத்தார்.
புதுப்பிக்கப்பட்ட பள்ளி, மாணவர் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் குடும்பத்தினர் முன்னிலையில், அமைச்சர் கயல்விழி பள்ளியை திறந்து வைத்தார்.
விழாவில், மாநகராட்சியின் நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், மூலனுார் ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, துாரம்பாடி பொதுமக்கள் பங்கேற்றனர்.