/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் மீன் மார்க்கெட் வளாகம் சீரமைப்பு
/
வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் மீன் மார்க்கெட் வளாகம் சீரமைப்பு
வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் மீன் மார்க்கெட் வளாகம் சீரமைப்பு
வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில் மீன் மார்க்கெட் வளாகம் சீரமைப்பு
ADDED : ஆக 17, 2025 11:54 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மீன் மார்க்கெட் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் உள்ளது. எந்த அடிப்படை வசதியுமின்றி இந்த வளாகம் நீண்ட காலமாக இருந்தது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 2.2 கோடி ரூபாய் மதிப்பில் இங்கு புதிய வளாகம் கட்டப்பட்டது. இதில், 28 கடைகள் கொண்ட வளாகம் 505 சதுர மீட்டர் பரப்பில், சிமென்ட் ஷீட் கூரையுடன் கட்டப்பட்டது.
வாகன பார்க்கிங், தண்ணீர் வசதி, மின் இணைப்புகள், விளக்கு மற்றும் மின் விசிறிகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கடந்த 2022 ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
புதிய மீன் மார்க்கெட் வளாகம் 2.2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 4.5 கோடி ரூபாய் வருவாய் தந்துள்ளது.
ஆனால், இந்த வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், ஏலதாரர் மற்றும் மீன் கடைக்காரர்கள் தரப்பில் விளக்கம் கேட்டது.
அவர்கள் தரப்பில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் வரும் போது, இரைச்சலும், நெரிசலும் ஏற்படுகிறது. கடைகள் வைக்க அமைக்கப்பட்ட மேடை உயரம் அதிகமாக உள்ளது இதைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில மாறுதல்கள் வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த வளாகத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி வளாகத்தின் கிழக்கு புறத்தில் உள்ள சுவர் இடித்தும், இரு புறங்களிலும் உள்ள மேடைகள் இடித்தும் பணிகள் துவங்கியுள்ளது.இந்த சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் இந்த வளாகம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.