/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு
/
கட்டட கண்காட்சியில்ரெப்கோ நிறுவன அரங்கு
ADDED : ஜூலை 20, 2025 06:50 AM

திருப்பூர் : மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் நடத்தும், 20வது கட்டட கட்டுமானப் பொருள் கண்காட்சி, தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் (18ம் தேதி) துவங்கியது.
நாளை வரை நடத்தப்பட உள்ள கண்காட்சியில், ரெப்கோ ேஹாம் பைனான்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் கிளை அரங்கு, பி- 20ல் செயல்படுகிறது.
நிறுவனத்தின் கோவை மண்டல வளர்ச்சி மேலாளர் ஷஜி அரங்கை திறந்து வைத்தார். கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி, விற்பனை மேலாளர் யுவராஜ், கிளை துணை மேலாளர் பிரியங்கா, அவிநாசி கிளை மேலாளர் விஜயகுமார் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த அரங்கில் வீடு கட்ட, வாங்க மற்றும் பிற கடன் தேவைகளுக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது.
கடனுதவி தேவைப்படுவோர், நேரில் அணுகி பயன் பெறலாம் என, திருப்பூர் கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.