ADDED : ஜன 27, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் குடியரசு தின விழா நடந்தது. பல்லடம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று 76வது குடியரசு தினம் முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நீதிபதிகள் பத்மா, ஸ்ரீதர், செல்லதுரை, சுரேஷ், பிரபாகரன், கண்ணன், ஷபீனா, பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க நிர்வாகிகள், சுப்ரமணியம், பழனிசாமி, பாலகுமார், குமரன், சண்முகம், அமர்நாத் உள்ளிட்டோர், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

