sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா

/

கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா

கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா

கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா


ADDED : ஜன 27, 2025 02:25 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தின விழா நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த மாநகர, மாவட்ட போலீசார் 58 பேருக்கு முதல்வர் பதக்கம்; 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பில் நலத்-திட்ட உதவி வழங்கப்பட்டது.

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்-டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.ஆயுதப்படை எஸ்.ஐ., மகேந்திரன், கமாண்டராக வாள் ஏந்தி வந்து, படையினரை பார்வையிட, கலெக்டருக்கு அழைப்புவி-டுத்தார்.

மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர், போலீஸ், என்.சி.சி., படையை பார்வையிட்டனர். துப்பாக்கி ஏந்தியபடி, போலீசார் கம்பீர அணிவகுப்பு நடத்தினர். சமாதானத்தை வலியு-றுத்தும் வகையில் புறா, மூவர்ண பலுான் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பாக பணிபுரிந்த மாநகர போலீசார் 23 பேர்; மாவட்ட போலீசார் 35 பேர் என, 58 பேருக்கு முதலமைச்சர் பதக்கம்; போலீஸ் உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்ள், தன்னார்வலர்ள் என, 210 பேருக்கு பாராட்டுச்-சான்று வழங்கப்பட்டது. விழா நிறைவாக நடந்ச கலை நிகழ்ச்சி-களில், அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவியர், 900 பேர் தேசப்பற்று பாடல்களுக்கு நடனமாடினர்.






      Dinamalar
      Follow us