/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்க கோரிக்கை
/
பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்க கோரிக்கை
பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்க கோரிக்கை
பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்க கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 08:02 PM
உடுமலை; அரசு பள்ளிகளில் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், உடல் அளவில் உறுதியாக இருப்பதற்கும், அரசின் சார்பில் கல்வியாண்டு தோறும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது.
கராத்தே, சிலம்பம் உட்பட ஏதேனும் ஒரு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கென அரசின் சார்பில், நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் வாயிலாக பயிற்சியாளருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் வாரத்தில், இரண்டு நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு ஒரு கல்வியாண்டில் நடக்கிறது.
மாணவர்களுக்கு இடையில் தற்காப்பு கலை பயிற்சி பெறுவதற்கு, பெரிதும் வரவேற்பு உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் மூன்று மாதங்கள் மட்டுமே, அதுவும் இரண்டு நாட்கள் என்ற நிலையால் முழுமையான ஒரு பயிற்சி பெற முடிவதில்லை. அரைகுறையான நிலையில்தான் இன்னும் பயிற்சி பெறுகின்றனர்.
ஒரு கல்வியாண்டில் வழங்கப்படும் பயிற்சி, அடுத்த கல்வியாண்டு துவங்கியதும் மாணவர்களுக்கு மறந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ச்சியான பயிற்சி இல்லாததுதான்.
மாணவர்களுக்கு கல்வியாண்டு முழுவதும், தொடர்ச்சியான தற்காப்பு பயிற்சி அளிப்பதற்கு பெற்றோர் மற்றும் பள்ளி கல்வி மேலாண்மை குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.