/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரைமட்டமாகும் வாரிய குடியிருப்பு; மாற்றுத்திட்டம் செயல்படுத்த கோரிக்கை

ADDED : டிச 09, 2025 08:18 AM

உடுமலை: இடிந்து தரைமட்டமாகி வரும், மருள்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தி, மாற்றுத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை அருகே மருள்பட்டியில், 1994ல், வீட்டு வசதி வாரியத்தால், சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ், 300 வீடுகள் கட்டப்பட்டன.
பல்வேறு காரணங்களால், வீடுகள் ஏலம் போகவில்லை. படிப்படியாக அங்கிருந்த வீடுகள் மற்றும் இதர கட்டமைப்புகளில் இருந்து பயன்படுத்த கூடிய, இரும்பு மற்றும் இதர பொருட்கள் எல்லாம் மாயமானது.
இதனால், மறு ஏலம் நடத்தினாலும், வீடுகளை வாங்க யாரும் முன்வராத நிலை ஏற்பட்டது.பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் இருப்பதால், வீடுகள் இடிந்து தரைமட்டமாகி வருகிறது.
அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூகவிரோத செயல்கள் மையமாகியுள்ளது. பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தி, மாற்றுத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.