/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பாறு அணைக்கு உயிர்நீர் விட கோரிக்கை
/
உப்பாறு அணைக்கு உயிர்நீர் விட கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 01:59 AM
உடுமலை; ''தாராபுரம், உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., தொகுப்பில் இருந்து உயிர் நீர் விட வேண்டும்'' என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:
உப்பாறு அணையில் மொத்தம், 24 அடியில், 12 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும், 7 அடிக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதாவது, 5 அடி நீரைத்தான் பயன்படுத்த முடியும். பாசனத்துக்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கமுடியும். கான்டூர் கால்வாய் அல்லாமல் பஞ்சலிங்க அருவியிலிருந்தும் கூடுதல் நீர் திருமூர்த்தி அணைக்கு வந்துகொண்டிருந்தது. அதனால், பி.ஏ.பி., தொகுப்பிலிருந்து இம்மாதம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உயிர் நீர் வழங்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

