/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிப்காட் நல்லா ஓடையில் கருவி அமைக்க கோரிக்கை
/
சிப்காட் நல்லா ஓடையில் கருவி அமைக்க கோரிக்கை
ADDED : செப் 28, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை, பெருந்துறை யூனியன் பகுதியில் செயல்படும் சிப்காட் ஆலைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக, மாசு கட்-டுப்பாட்டு வாரிய சேலம் மண்டல இணை தலைமை இன்ஜி-னியர் ஜெயலட்சுமியிடம், நேற்று மனு கொடுத்தனர்.
அதில், 'சிப்காட் தொழிற்பேட்டை இடையில் உள்ள நல்லா ஓடையில், ஆண்டு முழுவதும் நீரின் தன்மையை கண்காணிக்கும் வகையில், ஆன்லைன் டி.டி.எஸ்., மீட்டரை பொறுத்த வேண்டும். மீட்டருக்கான செலவு தொகையை பாதிக்கப்பட்ட மக்கள் நன்கொடையாக, 3.50 லட்சம் ரூபாய் வழங்குகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.