/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரங்கள் விலையில் மாற்றம் ஆய்வு செய்ய கோரிக்கை
/
உரங்கள் விலையில் மாற்றம் ஆய்வு செய்ய கோரிக்கை
ADDED : அக் 13, 2024 10:12 PM
உடுமலை : தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், சில உரங்களின் விலை வெளிச்சந்தையை விட கூடுதலாக இருப்பது குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனம் மற்றும் மழையை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைப்பயிர்கள் தற்போது வளர்ச்சி தருணத்தில் உள்ளதால், உரமிடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மழைக்கு பிறகு தென்னை மரங்களுக்கும் உரம் வைக்க, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 20;20 உள்ளிட்ட உரங்களின் விலை வெளிச்சந்தையை விட கூடுதலாக உள்ளது. இது குறித்து வேளாண்துறை வாயிலாக அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியான விலைக்கு விற்பனை செய்ய வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சீசனுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.