/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நல்ல தீர்ப்பு தாங்கய்யா' :பாடல் பாடி நீதிபதிக்கு வேண்டுகோள்
/
'நல்ல தீர்ப்பு தாங்கய்யா' :பாடல் பாடி நீதிபதிக்கு வேண்டுகோள்
'நல்ல தீர்ப்பு தாங்கய்யா' :பாடல் பாடி நீதிபதிக்கு வேண்டுகோள்
'நல்ல தீர்ப்பு தாங்கய்யா' :பாடல் பாடி நீதிபதிக்கு வேண்டுகோள்
ADDED : நவ 28, 2025 05:38 AM

பல்லடம்: திருப்பூர் அருகே, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், உருக்கமாக பாடல் பாடியபடி, சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் ஆகிய நான்கு கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சட்டப் போராட்டமாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.
இருப்பினும், குப்பை கிடங்கு அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் வேகம் காட்டி வருகிறது. பொதுமக்களும், எக்காரணம் கொண்டும் கிராமத்தில் குப்பை கொட்ட விடமாட்டோம் என்பதில் தீர்க்கமாக உள்ளனர். இதற்காக, கடந்த மூன்று நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், பாடல் ஒன்றை பாடி, சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் கோர்ட் வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமே தீர்ப்பு வெளியாகும் என, பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரி ஒருவர் கோர்ட் வாயிலாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கை நீதிபதிக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்துடன், பொதுமக்கள் இந்த பாடலை பாடியதாக, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

