/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் கால்வாய் பணி: அவதியில் பொதுமக்கள்
/
கிடப்பில் கால்வாய் பணி: அவதியில் பொதுமக்கள்
ADDED : நவ 28, 2025 05:38 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டின் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில், சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஒப்பந்ததாரர், தன் பணியை இஷ்டத்துக்கு இழுத்தடித்து செய்து வருகிறார். வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், குழி தோண்டி போடப்பட்டு, பணியை செய்யாமல் பல நாட்களாக கிடப்பில் போட்டுள்ளனர். ரோட்டோர குழியால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருவோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அவ்வப்போது மழை பெய்து வருவதால், குழியில் மழைநீர் தேங்குவதால், ரோடு தெரியாமல் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் கட்டுமான பணியை முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

