/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு
/
குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு
ADDED : ஜன 09, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் பணிபுரி வதாக வந்த தகவலின்பேரில், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் ஆய்வு செய்து, உறுதிப் படுத்தினர்.
குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் செல்லமணி, தனசூர்யா, சுகாதார உதவி இயக்குனர் சேதுபதி ஆகியோர் நேற்று, பனியன் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், 14 வயது பூர்த்தியடையாத ஒரு சிறுமியும், 18 வயது பூர்த்தியடையாத வளரிளம் பருவ சிறு வனும் மீட்கப்பட்டனர்.
குழந்தை தொழிலாளரை பணி அமர்த்திய நிறுவன உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.