/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிசர்வ் சைட்டில் மரக்கன்று குடியிருப்போர் சங்கம் திட்டம்
/
ரிசர்வ் சைட்டில் மரக்கன்று குடியிருப்போர் சங்கம் திட்டம்
ரிசர்வ் சைட்டில் மரக்கன்று குடியிருப்போர் சங்கம் திட்டம்
ரிசர்வ் சைட்டில் மரக்கன்று குடியிருப்போர் சங்கம் திட்டம்
ADDED : ஜூலை 18, 2025 11:29 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்பு உள்ளது. அதில், இந்த பகுதிக்கான ரிசர்வ் சைட்டும் சில இடங்களில் உள்ளது.
இதில், ஒரு சில இடம் பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பயன்பாட்டில் உள்ளது. சில ரிசர்வ் சைட்கள் உரிய பயன் பாடின்றி புதர் மற்றும் மண் மண்டிக்கிடக்கிறது. தற்போதைய நொய்யல் ரோட்டை அமைந்துள்ள ரிசர்வ் சைட்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில், ரிசர்வ் சைட்களை பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர். அவ்வகையில், எங்கள் பகுதியிலுள்ள ரிசர்வ் சைட்களை மரங்கள் நட்டு பராமரிக்கப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம்.
அதற்காக இந்த இடங்கள் மாநகராட்சி சார்பில், தற்போது சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நடுவதற்கு தயார்படுத்தப்படுகிறது. மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதோடு, பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர் அல்லது கம்பி வேலி அமைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.