/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை: அச்சத்தின் பிடியில் மக்கள்
/
குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை: அச்சத்தின் பிடியில் மக்கள்
குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை: அச்சத்தின் பிடியில் மக்கள்
குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை: அச்சத்தின் பிடியில் மக்கள்
ADDED : நவ 02, 2025 08:43 PM
உடுமலை: மடத்துக்குளம் அருகே குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை, சிறுத்தை வேட்டையாடியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லுார் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில வாரங்களாக, சிறுத்தை நடமாட்டம் உள்ளது. வளர்ப்பு பிராணிகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு வழங்கினர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு ஆத்துார் குடியிருப்பில் புகுந்த சிறுத்தை, நாகராஜ் என்பவரது வெள்ளாட்டை வேட்டையாடியது. குடியிருப்பு பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் வலம் வரும் சிறுத்தையால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையினரின் அலட்சித்தை கைவிட்டு, நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆத்துார், சங்கராமநல்லுார் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.