sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடியிருப்போர் குரல் தன்னிறைவு பெற்ற எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்பு பகுதி

/

குடியிருப்போர் குரல் தன்னிறைவு பெற்ற எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்பு பகுதி

குடியிருப்போர் குரல் தன்னிறைவு பெற்ற எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்பு பகுதி

குடியிருப்போர் குரல் தன்னிறைவு பெற்ற எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்பு பகுதி


ADDED : ஜூன் 21, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சியில் தற்போதைய 38வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்பு பகுதி. மங்கலம் ரோட்டுக்கும், நொய்யல் ஆற்றின் கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த பிரம்மாண்ட குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில் 43 ஆண்டுகள் முன்பே இந்த மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. நேர்த்தியான விசாலமான ரோடு அமைப்புடன் மனைப்பிரிவு அமைக்கப்பட்டு, வீட்டு வசதி சங்கம் சார்பில் விற்பனை யெ்யப்பட்டது.

எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராக கணேசன் இந்த சங்கம் துவங்கியது முதல் பணியாற்றுகிறார். சங்க செயலாளராக சந்திரசேகர், பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் தற்போது ெசயல்படுகின்றனர்.

43 ஆண்டு வரலாறு

சங்கச் செயல்பாடு மற்றும் குடியிருப்பு பகுதி குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில், 106.50 ஏக்கர் பரப்பில், மொத்தம் 1,021 மனைகளுடன் இந்த எஸ்.ஆர்., நகர் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 1982ம் ஆண்டில் இந்த மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆண்டிபாளையம் ஊராட்சியில் அமைந்திருந்தது.

வெறும் களிமண் பூமியாக இருந்த நிலையில், முறையான ரோடு வசதி, கழிவுநீர் கால்வாய் போன்றவை இன்றி பெரும் சிரமம் நிலவியது. பாதைக்கான இடம் விசாலமாக இருந்தும், முறையான ரோடு வசதியில்லை. லேசான மழை பெய்தால் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தான் இருந்தோம்.

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி போல், பால், மருந்து, குடிநீர் கூட இல்லாமல், மாணவர்கள் பள்ளிக்கு கூட போக முடியாமல், ெபரியவர்கள் வேலைக்கு வெளியே போக முடியாத நிலை, ஆண்டுக்கணக்கில் 2002ம் ஆண்டு வரை நீடித்தது.

ஊராட்சி சார்பிலும் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடோ, வளர்ச்சிப் பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை. எஸ்.ஆர். நகர் குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் இந்த சங்கம் வடக்கு - தெற்கு என கடந்த 2006ம் ஆண்டில் இரு சங்கங்களாக மாறின. சங்கம் துவங்கும் முன்பே இப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி மனிதனாக நின்று உழைத்த கணேசன் இதன் தலைவராக இருந்து வருகிறார்.

மாநகராட்சியுடன் இணைப்பு

2008ம் ஆண்டில் இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதையடுத்து மெல்ல மெல்ல அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இதற்காக சங்கம் சார்பில் தொடர்ந்து துறை ரீதியான அதிகாரிகளைச் சந்தித்தும், கவுன்சிலர்களை வலியுறுத்தியும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது.

இப்பகுதியில் உள்ள 23 பிரதான ரோடுகள் மற்றும் 2 குறுக்கு ரோடுகள் அனைத்தும் ரோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக வீடுகள் இல்லாத இரு குறுக்கு ரோடுகள் மட்டும் தார் ரோடு இல்லாமல் உள்ளது.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

குடிநீர் பிரச்னையைப் பொறுத்தவரை 15 நாட்களுக்கு ஒரு முறை கிடைத்து வந்தது. தற்போது வாரம் தோறும் தேவையான அளவில் குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைக்கிறது. முன்னர் நமக்கு நாமே திட்டத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டி அதிலிருந்து குடிநீர் பெறப்பட்டது. தற்போது, மாநகராட்சி சார்பில் பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தற்போது தான் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீதம் வரை பணிகள் முடிந்துள்ளன. இதனால், கழிவு நீர் பிரச்னை பெரியளவில் இப்பகுதியில் பாதிக்கவில்லை. குப்பைகளும் தினமும் வந்து துாய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். அனைத்து வீதிகளிலும் தெரு விளக்குகள் தேவையான அளவில் உள்ளன.

மாநகராட்சிக்கே எடுத்துக்காட்டு

சங்கத்தின் சார்பில் அனைத்து ரோடுகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, தற்போது அவை அனைத்தும் நிழல் தரும் வகையில் பயன் தருகிறது. எங்கள் பகுதியைப் பொறுத்த வரை இரு சிறிய ரோடுகள் மட்டுமே புதிதாக போட வேண்டியுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கான்கிரீட் ரோடு, மாநகராட்சிக்கே எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

சாலையோர பூங்கா திட்டம்

தற்போது வடக்கு பகுதியில் நொய்யல் கரையோரம் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் வெளி நபர்கள் கடந்து செல்லும்வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, எங்கள் எல்லைப் பகுதியில், ரோடை ஒட்டி, பூங்காக்கள் அமைக்கலாம் என்ற திட்டம் உள்ளது. அதன் மூலம் பாதுகாப்பு ஏற்படும்.

வீடுகளில் 'சிசிடிவி' கேமரா

கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வரை பெரும்பாலான வீடுகளில் உள்ளது. ஒரு சிலவற்றில் மட்டும் இல்லாத நிலை உள்ளது. விரைவில் அந்த வீடுகளிலும் கேமராக்கள் அமைக்கப்படும். தெரு முனைகளில் உள்ள வீடுகளில் தெருவை கண்காணிக்கும் வகையில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுத்த போராட்டத்தில் பல தரப்பும் பங்கேற்று அதை வெற்றியடைய வைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். குடியிருப்பின் மையத்தில் உள்ள பூங்கா, அம்ரூத் திட்டத்தில் 55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது இதன் நிலை குறிப்பிடும் வகையில் இல்லை. விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று; கண்காணிப்பு கேமராக்கள் போன்றவை சேதமடைந்து கிடக்கிறது. இதை முறையாக சீரமைக்க மாநகராட்சி முன் வர வேண்டும்.

---

பசுமையாக காட்சியளிக்கும் எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்பு.

பூங்கா பராமரிப்பின்றி உள்ளது.

பயன்படுத்தப்படாமல் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம்.

நொய்யல் கரையோர சாலையையொட்டியுள்ள ரிசர்வ சைட் இடம் செடிகள் முளைத்து புதர் மண்டியுள்ளது.

மோசமான நிலையில் உள்ள சாலை.

எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் பிரகாஷ்.

'எல்லோரும் ஒரே குடும்பம்'

''அனைத்து வீட்டு உரிமையாளர்கள் அடங்கிய 'வாட்ஸ் ஆப்' குரூப் உள்ளது. அடிப்படை வசதி தொடர்பான பிரச்னை இருந்தால் அதில் தகவல் பரிமாறப்படும். உடனடியாக சங்க நிர்வாகிகள் தீர்வுக்கு நடவடிக்கை எடுப்பர். மேலும், இப்பகுதியினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகி வருகிறோம். எந்த ஒரு வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அனைவரும் தவறாமல் பங்கேற்போம். சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வோம்.ஆண்டுதோறும் பொங்கல் விழா இரு நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படும். ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த விழா நிகழ்ச்சிகள் இருக்கும். அதே போல், இங்குள்ள கருப்பராயன் கோவிலில் ஆண்டுதோறும் கிடா வெட்டி விருந்து நடத்துவது; விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு என நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தேசியப் பண்டிகைகளும் உற்சாகத்துடன் அனைவரும் பங்கேற்று கொண்டாடுவோம்'' என்கின்றனர் இப்பகுதியினர்.ரிசர்வ் சைட்கள் மீட்பு போராட்டம்எஸ்.ஆர். நகர் குடியிருப்பு பகுதிக்கு 15.98 ஏக்கர் பரப்பில் ரிசர்வ் சைட், பொதுப்பயன்பாட்டுக்கான இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 பகுதிகளாக இந்த ரிசர்வ் சைட்கள் உள்ளன. இதில் சில இடங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது சங்க அலுவலகம், கட்டட மையம் ஆகியன அமைந்துள்ள 98 சென்ட் இடம்; 70 சென்ட் பரப்பில் உள்ள பூங்கா; குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடம்; தொழிற்பயிற்சி மையம் திட்டமிட்ட இடம்; பள்ளிக் கூடம் கட்ட ஒதுக்கிய இடம் போன்றவை மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மங்கலம் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் மண்டபம் ஆகியன அமைந்த இடம்; மேற்கு பகுதியில் 80 சென்ட் பரப்பளவுள்ள சிறுவர் பூங்காவுக்கான இடம் உள்ளிட்டவை சங்கம் சார்பில் மேற்கொண்ட பல்வேறு சட்டரீதியான போராட்டங்களுக்குப் பின்பே திரும்ப கிடைத்தது. இதில் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். பல்வேறு ரிசர்வ் சைட்களும் அதன் உரிய பயன்பாடின்றி வேறு வகையில் பயன்பட்டு வருகின்றன. இவற்றை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை குடியிருப்போர் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.








      Dinamalar
      Follow us