ADDED : டிச 31, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக அரசால் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அரசு உத்தரவுப்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூரில், மத்திய பஸ்ஸ்டாண்டில், திருவள்ளுவர் சிலை பொறித்த மெகா பலுான் பறக்கவிடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், போர்டிகோ பகுதியில், 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துசெல்லும் பொதுமக்கள், வள்ளுவர் சிலையை பார்வையிட்டு, மரியாதை செலுத்தி வருகின்றனர்.