/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடிக்கம்பம், சிலைகள் நிறுவ கட்டுப்பாடு: கட்சியினருக்கு அறிவுரை
/
கொடிக்கம்பம், சிலைகள் நிறுவ கட்டுப்பாடு: கட்சியினருக்கு அறிவுரை
கொடிக்கம்பம், சிலைகள் நிறுவ கட்டுப்பாடு: கட்சியினருக்கு அறிவுரை
கொடிக்கம்பம், சிலைகள் நிறுவ கட்டுப்பாடு: கட்சியினருக்கு அறிவுரை
ADDED : அக் 14, 2025 09:13 PM

உடுமலை; அரசியல் கட்சியினர் தனியார் நிலங்களில் கொடிக்கம்பங்கள், சிலைகள் அமைக்க வழிகாட்டுதல் அமல்படுத்தும் வகையில், கோட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், சிலைகள் தனியார் நிலங்களில் நிறுவ தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் மற்றும் உட்கோட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தமிழக அரசு தனியார் நிலங்களில் அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்கள், சிலைகள் அமைத்தல் மற்றும் சிறப்பு பிரிவாக தலைவர்கள் வருகையின் போது, கொடிகள் கட்டுதல் உள்ளிட்டவை குறித்து, நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.
இந்த வழிமுறைகளை செயல்படுத்தும் வகையில், கோட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு, உறுப்பினர்களாக, உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார்கள், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பி.டி.ஓ.,க்கள், நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை அலுவலர்கள் மற்றும் டி,எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர்.
உட்கோட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், ரோடுகள், நடை பாதைகள், பொது பயன்பாட்டு இடங்களில், பொதுமக்கள், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சிலைகள், கட்சி கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது.
நீர் நிலைகள் ஆக்கிரமிக்கக்கூடாது. தனியார் நிலங்களில் அமைக்க, உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். நீதிமன்றம், அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் கோட்ட அளவிலான குழு ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கும்.
அனுமதியின்றி, அமைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதியில் நிறுவப்பட்டால், 15 அடி உயரம் மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுப்பணித்துறையிடமிருந்து நிலைத்தன்மை சான்று பெற வேண்டும்.
தலைவர்கள் வருகையின் போது, தற்காலிகமாக கொடிகள் கட்டினால், ரோடு, பொது இடங்களை சேதப்படுத்தாமல், தரைமட்டத்திலிருந்து, 3.5 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்க வேண்டும்.
அரசுத்துறை அதிகாரிகள், வழிகாட்டுதல்களை அரசியல் கட்சியினர், தனிநபர்கள் மீறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டது.