/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 12:18 AM
திருப்பூர்; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் கிளை சார்பில், கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பழனிசாமி, தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., ஆனந்த், மாவட்ட செயலாளர் சுப்பையன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜூ, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், சங்க மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பலர் பேசினர்.
'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பென்ஷன், பணிக்கொடை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.