/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
ADDED : அக் 04, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை கிளை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆண்டு நேர்காணல், ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், பணி நிறைவு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில், 80 ஆண்டுகள் நிறைவடைந்த ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.