/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம்
ADDED : மார் 05, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் நிதி ஆலோசகர் மணிராம் முதலீட்டு திட்டங்கள் மற்றும் போலி முதலீடுகளை தவிர்ப்பது குறித்து விரிவாக பேசினார்.
பொள்ளாச்சி வாசன் ஐ கேர் நிறுவனம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. துணைத்தலைவர் ரகோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இணைச்செயலாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.

