/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ரயிலில் விழுந்து தற்கொலை
/
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ரயிலில் விழுந்து தற்கொலை
ADDED : பிப் 05, 2025 12:32 AM

அவிநாசி; ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், வஞ்சிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில், தலை துண்டாகி ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சடலத்தை கைப்பற்றிவிசாரணை நடத்தினர்.
தண்டவாளத்தில் கிடந்த மொபைல் போனை வைத்து, விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர், கருமத்தம்பட்டியில் வசித்து வந்த ராமகிருஷ்ணன், 73, என்பதும், ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றதும் தெரிந்தது.
அவரின் குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராமகிருஷ்ணன் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்பதும், அதனால், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.