/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
ADDED : பிப் 19, 2025 09:24 PM
உடுமலை; தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உடுமலை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க, உடுமலை கிளையின் செயற்குழு கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் வரவேற்றார். கவுரவத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவமனை அக்குபஞ்சர் மருத்துவர், ராகவேந்திரசாமி 'உணவு அருந்தும் முறை உடல்நலம் பாதுகாக்கும் முறை' குறித்து பேசினார்.
ஆடிட்டர் மதன், நடப்பாண்டு மற்றும் அடுத்தாண்டு வருமானவரி படிவம் தாக்கல் செய்யும் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், சங்க ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஜெயபால் நன்றி தெரிவித்தார்.

