/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர் சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர் சங்க கூட்டம்
ADDED : அக் 15, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர் பொதுநல சங்க கூட்டம் நடந்தது.
உடுமலையில், தனியார் திருமண மண்டபத்தில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் பொதுநல சங்க கூட்டம் நடந்தது.
சங்க உடுமலை கிளைச்செயலாளர் கங்காதரன் வரவேற்றார். சங்கத்தின் சார்பில் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, அலுவலர்கள் கலந்துரையாடினர். பொள்ளாச்சி கிளை நிர்வாகிகள், உடுமலை கிளைத்தலைவர் மயில்சாமி, பழநி கிளைச்செயலாளர் தமிழ்அரசு உட்பட பலரும் பங்கேற்றனர்.