/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
/
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
ADDED : அக் 04, 2025 11:27 PM

திருப்பூர்: திருப்பூர் ரேவதி கல்வி நிறுவனங்களில் அங்கமான ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலைக்கழகம், 'துணை சுகாதார அறிவியல் பிரிவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனம்'(Most Promising Institution in Allied Health Sciences) என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. விருதை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி ஆகியோர் வழங்கினர்; ரேவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, இணை நிர்வாக இயக்குனர் ரேவதி ஈஸ்வரமூர்த்தி, இயக்குனர் டாக்டர் ஹரி பிரணவ், துணை மருத்துவ அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் மெர்லின் ஏஞ்சல் ஆகியோர்பெற்றுக்கொண்டனர்.
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரி, மருத்துவப்பயிற்சி, முழுமையான கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு துணை சுகாதாரப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.