/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடையை ஆக்கிரமித்து பாதை; பணியை நிறுத்திய வருவாய்த்துறை
/
ஓடையை ஆக்கிரமித்து பாதை; பணியை நிறுத்திய வருவாய்த்துறை
ஓடையை ஆக்கிரமித்து பாதை; பணியை நிறுத்திய வருவாய்த்துறை
ஓடையை ஆக்கிரமித்து பாதை; பணியை நிறுத்திய வருவாய்த்துறை
ADDED : ஜூலை 31, 2025 11:21 PM
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து, பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஊர் மக்கள் புகார் அடிப்படையில், பணியை நிறுத்த வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் வழியாக செல்லும் ஓடையில் வழிந்தோடும் நீர், ராசாத்தாள் கோவில் குளத்தில் நிரம்புகிறது.
இக்குளத்தில் நிரம்பும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவியாக இருந்து வருகிறது. கணியாம்பூண்டி, சொர்ணபுரி ரிச் லேண்ட் வரும் ஓடை வழியாகத்தான், குளத்தில் மழை நீர் நிரம்பும்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிலர் ஓடையை சுருக்கி, அதன் ஓரத்தில் மண் கொட்டி, 'பொக்லைன்' உதவியுடன் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என, அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, அவிநாசி தாசில்தார் மற்றும் பூண்டி நகராட்சி கமிஷனரிடம் ஊர் மக்கள் புகார் மனு வழங்கினர்.
'நீர் நிலையை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; நீர்நிலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ராக்கியாபாளையம் பகுதியில் ஓடையில் மண் நிரப்பி சமப்படுத்தும் பணியை தடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தனர். இதையடுத்து பணியை நிறுத்துமாறு, வருவாய்த் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.