/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 26, 2024 11:57 PM
திருப்பூர்; கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்றுமுதல் பணி புறக்கணித்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
பணி பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது கட்டமாக, நேற்று பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மதன்குமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் நிலையிலான அலுவலர்கள், 300 பேர் பணிகளை புறக்கணித்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக வளாக வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று, பணிகளை புறக்கணித்து, தரைதளத்தில் அமர்ந்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில், தேக்கநிலையை களைய வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை, மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயிக்கவேண்டும் என்பன உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தால், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை சார்ந்த வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.