/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யுங்க! கலெக்டரிடம் மனு அளித்த நெருப்பெரிச்சல் பகுதி மக்கள்
/
குப்பை கொட்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யுங்க! கலெக்டரிடம் மனு அளித்த நெருப்பெரிச்சல் பகுதி மக்கள்
குப்பை கொட்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யுங்க! கலெக்டரிடம் மனு அளித்த நெருப்பெரிச்சல் பகுதி மக்கள்
குப்பை கொட்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யுங்க! கலெக்டரிடம் மனு அளித்த நெருப்பெரிச்சல் பகுதி மக்கள்
ADDED : ஜூலை 10, 2025 11:25 PM

திருப்பூர்; நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டன் பகுதி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, பொதுமக்கள் திரண்டுவந்து கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டனில், பத்திரப்பதிவு அலுவலகம் அருகே, தனியார் பாறைக்குழியில் கொட்டப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 8, 9ம் தேதிகளில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய மேயர் தினேஷ்குமாரை, சிறைப்பிடித்த பொதுமக்கள், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும்; குப்பை கொட்டமாட்டோம் என உறுதி அளிக்க கோரியும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் நேற்று ஜி.என்., கார்டன் பகுதி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, ஜி.என்., கார்டன் பாறைக்குழியில், மாநகராட்சி குப்பை கழிவுகளை கொட்ட வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் மனு அளித்தனர்.
சுகாதார சீர்கேடு
அப்பகுதியினர் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 4வது வார்டு, ஜி.என்., கார்டன் அருகே, பாறைக்குழியில், மாநகராட்சியின் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. பலவகையான கழிவுகள் கொட்டப்படுவதால், குடியிருப்பு பகுதி சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. கடும் நுர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாறைக்குழியிலிருந்து 30 மீ., துாரத்துக்குள், 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. 200 மீ., துாரத்தில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 70 மீ., துாரத்துக்குள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால், பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
அருகிலுள்ள விவசாய கிணறுகளும் மாசுபடும் நிலை உருவாகிறது. மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக, குப்பைகளை பாதுகாப்பாக கையாளவேண்டும். அதனை விடுத்து, குடியிருப்பு பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது சட்டவிரோதமானது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு, எங்கள் பகுதி மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கைவிடக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து, மக்கும் குப்பைகளை மட்டுமே பாறைக்குழியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம், எத்தகைய வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை. எனவே, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாதபட்சத்தில், அடுத்தகட்டமாக கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால், பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து செல்வோர் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்