sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பயங்கரவாதி குறித்த தகவலுக்கு ரூ.7 லட்சம் வெகுமதி: என்.ஐ.ஏ.,

/

 பயங்கரவாதி குறித்த தகவலுக்கு ரூ.7 லட்சம் வெகுமதி: என்.ஐ.ஏ.,

 பயங்கரவாதி குறித்த தகவலுக்கு ரூ.7 லட்சம் வெகுமதி: என்.ஐ.ஏ.,

 பயங்கரவாதி குறித்த தகவலுக்கு ரூ.7 லட்சம் வெகுமதி: என்.ஐ.ஏ.,


ADDED : மார் 15, 2026 06:37 AM

Google News

ADDED : மார் 15, 2026 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சீனிவாசனை, 2022ல், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், கொலை செய்தனர். அந்த அமைப்பு, அப்போது தடை செய்யப்பட்டது. அதன் பின், தலைமறைவாக உள்ள நபர்களை, என்.ஐ.ஏ., தொடர்ந்து தேடுகிறது.

தமிழகம், கேரளாவிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், என்.ஐ.ஏ., சார்பில், 'தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால், வெகுமதி வழங்கப்படும்' என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 'அப்துல் ரஷீத், 34, த/பெ மொய்தீன், கிழக்கேகர வீடு, நங்காத்திரி, பட்டாம்பி, பாலக்காடு, கேரளா.

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, கேரள வழக்கில், என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் உறுப்பினர். கைது செய்வதற்கு வழிவகுக்கும், எந்தவொரு தகவலையும் வழங்குபவருக்கு, 7 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்.

'மேற்படி நபரை பற்றி தகவல் தெரிவிக்க, 0484 2349344, 94977 15294 ஆகிய எண்களிலும், info.koc.nia@gov.in என்ற மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் . தகவல் தெரிவிப்பவர் விபரம், ரகசியமாக பாதுகாக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us