sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடைந்ததால் 'தாளம்'; சரிந்தாலோ பாதாளம்

/

உடைந்ததால் 'தாளம்'; சரிந்தாலோ பாதாளம்

உடைந்ததால் 'தாளம்'; சரிந்தாலோ பாதாளம்

உடைந்ததால் 'தாளம்'; சரிந்தாலோ பாதாளம்


ADDED : மார் 11, 2024 12:39 AM

Google News

ADDED : மார் 11, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கும் குப்பை

திருப்பூர், கணபதிபாளையத்தில் இருந்து அல்லாளபுரம் பள்ளி செல்லும் ரோட்டில், குப்பை வழிநெடுகவும் கொட்டப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ஸ்ரீ தரன், அல்லாளபுரம். (படம் உண்டு)

தீவிபத்து அபாயம்

திருப்பூர், 25வது வார்டு, வ.உ.சி., நகர் குறுக்குச்சந்தில், டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்படும், குப்பையால் தீ பிடித்து விடும் அபாயம் உள்ளது.

- சங்கர், வளையங்காடு. (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், தாராபுரம் ரோடு, சேரன் தொழிலாளர் காலனி, 7வது வீதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- கோவிந்தராஜூ, சேரன் தொழிலாளர் காலனி. (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

அவிநாசி, வேலாயுதம்பாளையம், பெரிய கருணைபாளையத்தில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

- யோகேஷ்குமார், பெரிய கருணைபாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், கோவில்வழி - அமராவதிபாளையம் வழியில் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

-ராமமூர்த்தி, அமராவதிபாளையம். (படம் உண்டு)

அருகில் ஆபத்து

திருப்பூர், பழைய மார்க்கெட் வீதியில், பாதாள சாக்கடை மூடி உடைந்து 'ஆட்டம்' காண்கிறது. திடீரென சரிந்து விழுந்தால், ஆபத்து காத்திருக்கிறது.

- அருணாச்சலம், பழைய மார்க்கெட் வீதி. (படம் உண்டு)

ஓரத்தில் பலகை

திருப்பூர், பாலாஜி நகரில் அறிவிப்பு பலகை சேதமாகி, கால்வாய் ஓரத்தில் கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும்.

- சந்தியா, பாலாஜி நகர். (படம் உண்டு)

மின் விபத்து அபாயம்

திருப்பூர், துரைசாமிபுரம் முதல்வீதி, மில்லர் ஸ்டாப் அருகில் மின் கம்பிகளுக்கு நடுவே மரக்கிளைகள் செல்வதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

- சாந்தி, துரைசாமிபுரம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us