/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்தில் நெற்கதிர் அறுவடை திருவிழா: பாரம்பரிய பூஜையுடன் பழங்குடியினர் வழிபாடு

ADDED : நவ 10, 2025 12:01 AM

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை பகுதியில், 'பூ புத்தரி' அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பழங்குடியின பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிருக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக, 'பூ புத்தரி' எனப்படும் கதிர் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலில் விழா துவங்கியது.
இதை தொடர்ந்து, புளியாம்பாறை பகவதி மற்றும் ஆயிரம் வில்லி (சிவன்) கோவிலில் நேற்று, இவ்விழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு கதிர் அறுவடை செய்வதற்காக, கோவிலில் இருந்து செண்டை மேளம் மற்றும் பழங்குடியினரின் இசையுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டது. அந்த நெற்கதிர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விவசாயிகள் கூறுகையில், 'கோவிலில் பூஜை செய்து வழங்கப்படும் நெற்கதிரை விவசாயிகள் வீட்டில் வைத்து பூஜை செய்த பின், நெல் அறுவடை செய்வதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம்,' என்றனர்.