/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சைக்கிள் ஓட்டுங்க... நோயை விரட்டுங்க!
/
சைக்கிள் ஓட்டுங்க... நோயை விரட்டுங்க!
ADDED : ஜூன் 02, 2025 11:43 PM
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்பாக இயங்கி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் ஆற்றல், வியர்வையை கொட்ட வைக்கும் உடற்பயிற்சிகளுக்கு உண்டு. இதில், சைக்கிள் ஓட்டுவது, முக்கிய பங்காற்றுகிறது.
சைக்கிள் ஓட்டுவதால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் எழும் மாசு குறைவது ஒருபுறமிருக்க, உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளும் கிடைக்கும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
இதயத் துடிப்பு சீராகும்
இந்திய புற்றுநோய் மையத்தின், திருப்பூர் மைய புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக் டர் சதீஷ்குமார் கூறியதாவது:
சைக்கிள் ஓட்டும் போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மூளை செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்படும். கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்பு பகுதிகள், முதுகு தண்டுவடம், இடுப்பு பகுதி ஆகியவை வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க உதவும்.
புற்றுநோயைகட்டுப்படுத்தும்
அதிகளவில் வியர்வை வெளியேறுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறையும். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல் பருமன். 'ஏரோபிக் உடற்பயிற்சி' அதாவது, நன்றாக மூச்சுவாங்கி, அதிகளவு வியர்வையை வெளியேற்றும் எந்தவொரு உடற்பயிற்சியும் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும்.
அந்த வகையில் சைக்கிள் ஓட்டுவதும், புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும். அதனால் தான், புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூட சைக்கிள் பேரணியாக திருப்பூரில் நடத்தினோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று (ஜூன் 3)உலக சைக்கிள் தினம்.
ஆண்டுதோறும், ஜூலை 3ல், உலக
சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருளாக, 'நிலையான எதிர்காலத்துக்கு சைக்கிள் ஓட்டுதல்
அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மனநலம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும் சைக்கிளின் பங்களிப்பு மகத்தானது' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது