/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுந்திடு தேசமே! சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தயாராகிறது சிக்கண்ணா மைதானம்
/
எழுந்திடு தேசமே! சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தயாராகிறது சிக்கண்ணா மைதானம்
எழுந்திடு தேசமே! சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தயாராகிறது சிக்கண்ணா மைதானம்
எழுந்திடு தேசமே! சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தயாராகிறது சிக்கண்ணா மைதானம்
ADDED : ஆக 13, 2025 10:44 PM

திருப்பூர்; சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தன.
நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானத்தில், சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கவுள்ள நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே தேசியக் கொடி ஏற்றுகிறார். போலீசார், பேண்ட் வாத்தியக்குழு, ஊர் காவல்படை, என்.சி.சி., மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்படுகின்றனர்; அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்று; அரசு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. சுதந்திர தின விழா ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் செய்துவருகின்றனர்.
நேற்று, சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் சுதந்திர தின விழா ஒத்திகை நடந்தது. போலீசார், பேண்ட் வாத்தியக்குழு, ஊர்காவல் படை, தீயணைப்பு படை, என்.சி.சி., மாணவர்கள், சீருடை அணிந்து, அணிவகுப்பு நடத்தி ஒத்திகை பார்த்தனர். விழாவில் நேர்த்தியாக திறமையை வெளிப்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்த்து, திருத்தங்கள் செய்துகொண்டனர்.
விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லுாரி வளாகம் மற்றும் புஷ்பா ரவுண்டானா முதல் கல்லுாரி வரை பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருப்பூர் மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.