/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி
/
அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி
அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி
அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி
ADDED : மார் 20, 2024 12:28 AM
பொங்கலுார்;பெரும்பாலான விவசாயிகள் பயிர் தொழிலுடன், கால்நடை வளர்ப்பையும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பால் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது. தற்பொழுது கடும் வறட்சி நிலவுவதால் புல்வெளிகள் காய்ந்து விட்டன. இதனால், பசுந்தீவனங்கள் இல்லை.
தீவன பற்றாக்குறையைச் சமாளிக்க விவசாயிகள் காய்ந்த சோளத்தட்டு, வைக்கோல் மற்றும் அடர் தீவனம், நிலத்திற்கு அடியுரமாக இடப்படும் கழிவு பஞ்சு ஆகியவற்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து கால்நடைகளைக் காப்பாற்றி வருகின்றனர். இதனால், தீவனச் செலவு எகிறி உள்ளது. செலவு அதிகரித்துள்ளதால் கால்நடை விவசாயிகள் லாபம் பார்க்க முடியாமல் சோர்வடைந்துள்ளனர்.